Magaa Arulin Jothiyai Tamil Christian Paamalaigal Song Lyrics – மகா அருளின் ஜோதியை
1. மகா அருளின் ஜோதியை
வீசிம் மெய்ச்சுடர் எத்தனை
பிரகாசமாய் விளங்கும்
தாவீதின் மைந்தன் இயேசுவே
நீர் தாம் என் நேச நாதரே
என் பொக்கிஷம் என் பங்கும்
முற்றும் சுற்றும்
தயவாலும் உண்மையாலும்
நீர் நிறைந்தோர்
மேன்மை நாமமும் அடைந்தோர்.
2. என் முத்தே என் கிரீடமே,
உம்மோடு தேவ மைந்தனே,
நான் ஐக்கியமாக வேண்டும்;
உயர்ந்த ராஜா, உமது
நற்சுவிஷேசம் எனக்கு
அமிர்தம், பாலும் தேனும்;
ஐயா, மெய்யா,
தேவ ரூபே, வாடா பூவே,
நீரே யாவும்
ஜீவ ஊற்றும் மெய் மன்னாவும்
3. மகிழ்வேன் என் சிநேகிதர்
அல்பா ஒமேகா என்பவர்,
என் நேசர் ஆதி அந்தம்
இனி மோட்சானந்தத்திலே
நான் அவரண்டை சேர்வேனே
என் பாக்கியம் அநந்தம்
ஆமேன், ஆமேன்,
வா, ரட்சிப்போ, வா வெற்றியே
உனக்காக
வாஞ்சிப்பேன் நான் சேர்வாயாக.
Magaa Arulin Jothiyai Lyrics, மகா அருளின் ஜோதியை பாடல் வரிகள்
Magaa Arulin Jothiyai song Lyrics in English
1.Magaa Arulin Jothiyai
Veesum Meisudar Eththanai
Pirakassamaai Vilangum
Thaaveethin Mainthan Yesuvai
Neer Thaam En Neasa Naatharae
En Pokkisham En Pangum
Muttrum Suttrum
Thayavaalum Unmaiyaalum
Neer Niranthor
Meanmai Naamamum Adainthor
2.En Muthae En Kireedamae
Ummodu Deva Mainthanae
Naan Aikkiyamaaga Veandum
Uyarntha Raaja Umathu
Narsuvishesham Enakku
Amirtham Paalum Theanum
Aiya Meiyaa
Deva Roobae Vaadaa Poovae
Neerae Yaavum
Jeeva Oottrum Mei Mannavum
3.Magilvean En Sinekithar
Alba Omega Enbavar
En Neasar Aathi Antham
Ini Motchanthathilae
Naan Avarandai Searveanae
En Baakkiyam Anantham
Amen Amen
Vaa Ratchippeae Vaa Vettriyae
Unakkaga
Vaanjippean Naan Searvaayaga
——————————————–
1. மகா அருளின் ஜோதியை
வீசிடும் வெள்ளி எத்தனை
பிரகாசமாய் விளங்கும்
தாவீதின் மைந்தன் இயேசுவே
நீரே என் மணவாளனே
என் பொக்கிஷம் என் பங்கும்
முற்றும் சுற்றும்
தயவாலும் உண்மையாலும்
நீர் நிறைந்தோர்
மேன்மை நாமமும் அடைந்தோர்.
2. சிநேகமுள்ள பார்வையால்
அடியேனை நீர் நோக்கினால்
பரம் வெளிச்சம் காட்டும்
நீர் சொல்லும் இன்ப சொற்களும்
தரும் சரீரம் ரத்தமும்
என் ஆத்துமத்தை ஆற்றும்
தேற, சேர
கிட்டும் என்னை நற்றிடனைத்
தந்தே தேற்றும்
அன்புமாய் அரவணையும்.
3. பிதாவே நீர் அநாதியில்
என் பேரிலே குமாரனில்
சிநேகம் வைத்த கர்த்தா;
குமாரன் என்னைத் தமக்கே
மனைவி என்றன்புடனே
தெரிந்து கொண்ட பர்த்தா
மெத்த கெட்ட
பாவியான என்னைவான
கர்த்தர்தாமே
நோக்கினதிரக்கமாமே.
4. கிண்ணரம், யாழும் வீணையும்
சங்கீத வாத்தியங்களும்
களிப்பாய்த் தொனிக்கட்டும்
அன்புள்ள இயேசுவுடனே
நான் என்றென்றைக்கும் வாழ்வதே
என் ஆவியை எழுப்பும்
ஆடி, பாடி,
கிறிஸ்துதாமே நேசராமே
என்று ஓதும்
சந்தம் இன்பமே எப்போதும்.
5. மகிழ்வேன் என் சிநேகிதர்
அல்பா ஒமேகா என்பவர்,
என் நேசர் ஆதியந்தம்
இனி மோட்சானந்தத்திலே
நான் அவரண்டை சேர்வேனே
என் பாக்கியம் அநந்தம்
ஆமேன், ஆமேன்,
வா, ரட்சிப்போ, வா கெலிப்போ
உனக்காக
வாஞ்சிப்பேன் நான் சேர்வாயாக.
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Magaa Arulin Jothiyai’.
- The lyrics express devotion to Jesus and highlight themes of love and spiritual connection.
- It includes both Tamil and English versions of the lyrics to cater to a wider audience.
- Additional links for similar Christian songs are provided at the end of the article.
Estimated reading time: 3 minutes


