ஒருமுறை ஒருமுறை என்னை – Orumurai Orumurai Ennai

Faith Score+2
Faith Score+2

ஒருமுறை ஒருமுறை என்னை – Orumurai Orumurai Ennai

ஒருமுறை ஒருமுறை என்னை நினைத்தருளுமே
பலமுறை பலமுறை நான் விழுந்தவள்தானே (2)

1.பள்ளங்கள கடந்திட என் பக்கம் நீங்க இருக்கனும்
தடைகள தாண்டிட என்னை தாங்கி நீங்க பிடிக்கனும்
நான் சாயும்பாது உங்க தோள்மேல் சாயனும்
தினமும் காலையில் உங்க முகத்தை பார்க்கணும் (2) – ஒருமுறை

2.மாயங்களில் முழ்காமல் நீங்க என்னை மீட்கனும்
ஆழங்களில் வீழாமல் என்னை விலக்கி நீங்க காக்கனும்
என் கால்கள் இடராமல் உங்க கரங்களில் சுமக்கணும்
வழியில் வலுவாமல் என் விரலை பிடிக்கனும் (2) – ஒருமுறை

3.முட்களுக்குள் சிக்காமல் என் பட்சம் நீங்க இருக்கனும்
தீங்கு என்னை அனுகாமல் என் சார்பில் நீங்க இருக்கணும்
நான் தளர்ந்து போகாமல் விசுவாசம் வேண்டுமே.
நான் ஜீவன் பெற்றிட உங்க சுவாசம் போதுமே (2) – ஒருமுறை

4.பாவம் என்னை பற்றாமல் நீங்க பக்குவமாய் காக்கனும்
சாபம் என்னை தொடராமல் என்னை சூழ்ந்து நீங்க இருக்கனும்.
என் ஜீவன் பிழைத்திட உங்க வார்த்தை வேண்டுமே
நான் திருப்தியாகிட உங்க வசனம் போதுமே (2) – ஒருமுறை

5.சாட்சியாய் வாழ்ந்திட உங்க சத்தியம் வேண்டுமே
உமக்கு உழியம் செய்திட உங்க உதவி வேணுமே (2)
உங்க வருகையில் உம்மோடு சேரனும் நித்திய வாழ்விலே நான் சுகித்திட வேணுமே (2)

ஒருமுறை ஒருமுறை என்னை நினைத்தருளுமே
பலமுறை பலமுறை நான் விழுந்தவள்தானே (2)

Orumurai Orumurai Ennai song lyrics in english

Orumurai Orumurai Ennai

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo