Sooriyan Asthamithirundirum Lyrics – சூரியன் அஸ்தமித்திருண்டிடும்

Faith Score+1
Faith Score+1

Sooriyan Asthamithirundirum Lyrics – சூரியன் அஸ்தமித்திருண்டிடும்

பல்லவி

சூரியன் அஸ்தமித்திருண்டிடும் வேளையில்
சூழ்ந்தனர் பிணியாளிகள்-உனை நெருங்கித்
துயர் தீர வேண்டினரே.

அனுபல்லவி

இன்னேரம் உன்தயை தேடும் இவ்வடியாரின்
இன்னலெல்லாம் ஓட அன்பே உன்னருள் ஈவாய். – சூரி

சரணங்கள்

1. பேயின் அகோரத்வம் உனைக்கண்டு பறந்தது,
நோயும் நிர்ப்பந்தமும் நீ தொட ஒழிந்தன,
வாய்க்கும் சுகானந்தம் உனை நம்பினோர்க்கெல்லாம்,
தாய்க் கருணையுடையோய், இன்றும் உன் தயை கூர்வாய். – சூரி

2. இஷ்டரின் துரோகத்தால் இடர் அடைந்துழல்வோரும்,
துஷ்டர் செய்துன்பத்தால் தயங்கித் தவிப்போரும்,
கஷ்டமெல்லாம் தீர்ந்து களிக்கக் கருணை கூர்வாய்!
அஷ்டதிக்கும் ஆள்வோய், அபயம் அபயம் என்றோம். – சூரி

3. எளியோர் வறுமையில் இன்னருள் ஊற்றுவாய்,
விழிப்போடிரவிற் கண்ணீர் விடுவோரைத் தேற்றுவாய்,
வழி தப்பி அலைவோரை வழி காட்டி ஆற்றுவாய்,
பழி பாவம் துணிவோரைத் தடுத்தாண்டு மாற்றுவாய். – சூரி

4. சருவ சக்தி சதா காலமும் உனதல்லோ?
வருத்த மெல்லாம் ஓடும் வார்த்தை ஒன்று சொல்ல,
உரித்தாய்க் கரத்தினால் உன்னடியாரைத் தொடுவாயே,
கருகுங் கங்குலிலும் யாம் களிப்பாய்ச் சுகிப்போமே. – சூரி

Sooriyan Asthamithirundirum Lyrics in English

Sooriyan Asthamithirundirum Vealaiyil
Soolnthanar Piniyaalikal Unai Nerungi
Thuyar Theera Vendinarae

Innearam Un Thayai Theadum Evvadiyaarin
Innal Ellaam Ooda Anbae Unnarul Eevaai

1.Peayin Akorathvam Unaikandu Paranthu
Noaiyum Nirpanthamum Nee Thoda Olinthana
Vaaikkum Suganantham Unai Nambinoark Ellam
Thaai Karunai Udaiyoai Intrum Un Thayai Koorvaai

2.Ishtarin Thorokaththaal Edar Adainthulalvorum
Thustar Seithunbaththaal Thayangi Thaviporum
Kastamellaam Theernthu Kalikka Karunai Koorvaai
Astathikkum Aalvoai Abayam Abayam Entrom

3.Eliyoar Varumaiyil Innarul Ootruvaai
Vizhi Poradiravir Kanneer Viduvorai Theattruvaai
Vazhi Thappi Alaivorai Vazhi Kaatti Aattruvaai
Pazhi Paavam Thunivorai Thaduththaandu Maattruvaai

4.Saruva Sakthi Kaalamum Unathallo
Varuththam Ellam Oodum Vaarththai Ontru Solla
uriththaai Karaththinaal Unnadiyaarai Thoduvaayae
Karugm Kangulilum Yaam Kalippaai Sugipomae

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo