உம் அருள் பெற இயேசுவே – Um Arul Pera Yesuvae

Faith Score+1
Faith Score+1

உம் அருள் பெற இயேசுவே – Um Arul Pera Yesuvae Tamil Christian Gnanapaadalgal song lyrics

1. உம் அருள் பெற, இயேசுவே,
நான் பாத்திரன் அல்லேன்;
என்றாலும் தாசன் பேரிலே
கடாக்ஷம் வையுமேன்.

2. நீர் எனக்குள் பிரவேசிக்க
நான் தக்கோன் அல்லவே
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க
நிமித்தம் இல்லையே.

3. ஆனாலும் வாரும் தயவாய்,
மா நேச ரக்ஷகா;
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய்
என் பாவ நாசகா.

4. நற்கருணையாம் பந்திக்கும்
அபாத்திரன் ஆயினேன்
நற் சீரைத் தந்து என்னையும்
கண்ணோக்கிப் பாருமேன்.

5. தெய்வீக பான போஜனம்
அன்பாக ஈகிறீர்;
மெய்யான திவ்விய அமிர்தம்
உட்கொள்ளச் செய்கிறீர்.

6. என் பக்தி, ஜீவன் இதினால்
நீர் விர்த்தியாக்குமேன்;
உந்தன் சரீரம் இரத்தத்தால்
சுத்தாங்கம் பண்ணுமேன்.

7. என் ஆவி, தேகம், செல்வமும்
நான் தத்தம் செய்கிறேன்;
ஆ இயேசுவே, சமஸ்தமும்
பிரதிஷ்டை செய்கிறேன்.

உம் அருள் பெற இயேசுவே பாடல் வரிகள், Um Arul Pera Yesuvae Lyrics, Tamil songs

Um Arul Pera Yesuvae song lyrics in English

1.Um Arul Peara Yesuvae
Naan Paathiram Allean
Entraalum Thaasan Pearilae
Kadaashsm Vaiyumaean

2.Neer Enakkul Piraveasikka
Naan Thakkoan Allavae
Neer En Paazh Nenjai Aasikka
Nimiththam Illaiyae

3.Aanaalum Vaarum Thayavaai
Maa Neasha Rashika
Entraikkum Thangum Aikkiyamaai
En Paava Naasaka

4.Nar Karunaiyaam Panthikkum
Abaththiran Aayinean
Nar Seerai Thanthu Ennaiyum
Kannokki Paarumean

5.Deiveega Paana Pojam
Anbaaga Eekireer
Meiyaana Dhiviya Amirtham
Utkolla Seikireer

6.En Bakthi Jeevan Ithinaal
Neer Virththiyaakkumean
Unthan Sareeram Rathththaal
Suththaangam Pannumean

7.En Aavi Degam Selvamum
Naan Thaththam Seikirean
Aa Yeasuvae Sasthamum
Pirasthidai Seikirean

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the song lyrics for ‘Um Arul Pera Yesuvae – உம் அருள் பெற இயேசுவே’.
  • It includes verses expressing devotion to Yesuvae, emphasizing themes of grace and faith.
  • The lyrics are available in both Tamil and English, providing accessibility to a wider audience.
  • Links to other Tamil Christian songs are also provided for further exploration.
1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo