Keerthiyilum Magimayilum song lyrics – கீர்த்தியிலும் மகிமையிலும்
கீர்த்தியிலும் மகிமையிலும் உயர்ந்தவரே
உம் புகழை நிதம் சொல்லி கணம் பண்ணுவேன் -2
இயேசையா அல்லேலூயா, என் இயேசையா அல்லேலூயா
ஆராதனை, துதி ஆராதனை ஆராதனை, உமக்கே ஆராதனை
ஆராதனை, துதி ஆராதனை,ஆராதனை, துதி ஆராதனை
1. தேவாதி தேவனே பரலோக ராஜனே
மானிட ரூபத்தில் வந்தீரைய்யா
ராஜாதி ராஜனே பிரபுக்களின் தேவனே
நீரே என் இரட்சிப்பும் மீட்புமையா
2. என் மேல் நீர் வைத்திட்ட அளவில்லா அன்பினால்
சிலுவையில் உம்மையே அர்பணித்தீர்
என் ஆத்ம நேசரே வாழ்வின் ஆதாரமே
பாவத்தில் இருந்தென்னை மீட்டவரே
3. அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
வல்லமை உள்ள தேவன் நீரே
நித்யமானவர் சமாதான காரணர்
உலகத்தை இரட்சிக்க வந்தவரே
