Maaratha Kirubai Tamil Christian Song Lyrics, Written and Sung by Pr. Ram Kumar – மாறாத கிருபை
நான் நிற்பதும் விழாததும் உந்தன் கிருபையே
நான் நிர்மூலமாகாததும் கிருபையே -2
கிருபையே கிருபையே கிருபையே
மாறாது உந்தன் கிருபையே -2
(என் தாயின் வயிற்றிலிருந்து என்னைஎடுத்தவர் நீரே. சங்கீதம். 71 : 6)
1.தாயின் கருவிலே என்னை கண்டீரையா
பெயர் சொல்லியே அழைத்தீரையா -2
உங்க கிருபை எனக்கு போதுமே
என் வாழ்க்கையில் வேறெதுவும் வேண்டாமே -2
கிருபையே கிருபையே
மாறாத உந்தன் கிருபையே -2
2.ஜீவனை விட உன் கிருபை பெரியது
என் வாழ்நாள் எல்லாம் உம்மை துதிப்பேன் ஐயா-2
இயேசுவே நீர் நல்லவர்
என்றென்றுமே நீர் மாறாதவர் -2
கிருபையே கிருபையே
மாறாத உந்தன் கிருபையே -2
Maaratha Kirubai Song Lyrics, மாறாத கிருபை பாடல் வரிகள்
Maaratha Kirubai Lyrics in English
Naan Nirpathum Vizhathathum Unthan Kirubaiyae
Naan Nirmoolamagathathum Kirubaiyae -2
Kirubaiyae Kirubaiyae Kirubaiyae
Maarathu Unthan Kirubaiyae -2
1.Thaayin Karuvilae Ennai kandeeraiya
Peyar Solliyae Azhaitheeraiya -2
Unga Kirubai Enakku Pothumae
En Vaalkkaiyil Verathum Vendamae -2
Kirubaiyae Kirubaiyae
Maaratha Unthan Kirubaiyae -2
2.Jeevanai Vida Un Kirubai Periyathu
En Vaalnaal Ellaam Ummai Thuthippen Aiya -2
Yesuvae Neer Nallavar
Entrentrumae Neer Marathavar -2
Kirubaiyae Kirubaiyae
Maaratha Unthan Kirubaiyae -2
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
El-Shadai Sarvavallavar Ministries
S M Palayam – Palani, Dindugal.
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Maaratha Kirubai’ written and sung by Pr. Ram Kumar.
- The lyrics express themes of divine grace and reliance on God’s unchanging mercy.
- The song emphasizes the singer’s devotion and gratitude towards Jesus throughout their life.
- It includes both the original Tamil lyrics and an English transliteration for accessibility.
- The song lyrics are published by World Tamil Christians, promoting Tamil Christian music and devotion.
Estimated reading time: 3 minutes
கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான தேவனுடைய பிள்ளைகள் யாவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள் திண்டுக்கல் மாவட்டம் எஸ்எம் பாளையம் பகுதியிலே எல்ஷடாய் சர்வ வல்லவர் என்கிற ஊழியங்களை கர்த்தருடைய கிருபையினால் செய்து வரும் பாஸ்டர் ராம்குமார் அவர்களுக்காக கர்த்தரை துதிக்கிறேன் கர்த்தர் அவரை அந்த பகுதியிலே பயன்படுத்தி அநேக ஜனங்களுக்கு ஆசீர்வாதமாய் நடத்தி வருவதற்காக கர்த்தரை துதிக்கிறேன்.
நிர்மூலமாகாதது கர்த்தருடைய கிருபையே என்பதை அடிப்படையாய் கொண்டு நான் நிற்பதும் விழாமல் இருப்பதும் தேவ கிருபைதான் என்று வசனத்தை பாடலாக பரிசுத்த
ஆவியானவர் ஒத்தாசையோடு அதை மாற்றி பாடிிருக்கிற இவரை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாரா நேர்த்தியாய் இசை யமைத்து அதை அழகான வீடியோ ஒளிப்பதிவு செய்து இன்றைக்கு அவர்கள் இந்த பாடலை வெளியிடுகிறார்.
கர்த்தர்தாமே இதை அநேக ஜனங்களுக்கு சபைகளுக்கு ஆசீர்வாதமாய் மாற்றி தருவாராக இன்னும் அருமையான பாஸ்டர்
ராம்குமார் அவர்களுக்குள் இருந்து பல பாடல்கள் தேசத்தை ஆசீர்வதிக்கும் நதிகளாய் புறப்படுவதாக என்று நான் வாழ்த்துகிறேன்.
யாக்கோபு வேர்பற்றி பூப்பூத்து காய்காய் உலகத்தை பலனால் நிரப்பும் நாட்கள் வரும் என்று கர்த்தர் சொன்ன இந்த வாக்குத்தத்த
வசனம் இவருடைய தனிப்பட்ட வாழ்விலும் ஊழியத்திலும் நிறைவேறுவதாக கிரல் ஜனங்களை ரட்சிப்ப தற்கு கர்த்தர் இவரையும் இவருக்கு கொடுத்திருக்கிற கிருபைகளையும் பயன்படுத்துவாராக என்று நான் ஜெபிக்கிறேன் ஒரு நிமிடம் இந்த
பாடலுக்காக நாம் ஜெபிப்போம்.
அன்பின் பிதாவே உம்மை நாங்கள் நன்றியோடு ஸ்தோத்தரி
எங்கள் கால்கள் சருக்குகிற நேரமெல்லாம்
உம்முடைய கிருபையால் தாங்கி எங்கள் அடிகளை
கண்மலையின் மேல் உறுதிப்படுத்தி உம்மை துதிக்கும் துதியினால் எங்களை நிரப்புகிறீரே உமக்கு ஸ்தோத்திரம்
சேற்றிலிருந்தும் புளியிலிருந்தும் எங்களை தூக்கி எடுத்து உம்முடைய ஒப்பற்ற மகத்துவமான கல்வாரி அன்பை நினைத்து
நினைத்து இயேசு ராஜாவை மகிமைப்படுத்தும் துதியினால் எங்கள் உள்ளங்களையும் எங்கள் உதடுகளையும் நிரப்பி வருகிறீரே உமக்கு
ஸ்தோத்திரம் அருமையான பாஸ்டர் ராம்குமார்
அவர்களை ஆசீர்வதியும் அவர்கள் மூலம் வெளியிடப்படுகிற இந்த பாடல்கள் அநேகருக்கு ஆசீர்வாதமாய் மாறட்டும் சபையை
ஆசீர்வதியும் குடும்பத்தை ஆசீர்வதியும்
இவர்கள் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் மிகவும் அதிகமாய் கிரியை செய்கிற கர்த்தருடைய வல்லமை
இவர்கள் ஊழியத்தில் வெளிப்படுவதாக என்று வாழ்த்துகிறேன் இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் நல்ல பிதாவே ஆமென் ஆமென்.
தேவ பிள்ளைகளே இந்த பாடல்களை நீங்களும் பாருங்கள் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் நிர்மூலமாகாமல் இருக்கிறது கர்த்தருடைய கிருபையே.

