மனதுருகும் தேவனே என்னை – Manathurugum Devanae Ennai Lyrics
மனதுருகும் தேவனே என்னை தேற்றும் இராஜனே
நீரே எனது வழியையா
மனதுருகும் தேவனே என்னை தேற்றும் இராஜனே
நீரே எனது ஒளியையா
உம்மோடு நானும் உறவாடுவேன்
நீரின்றி நானும் உயிர் வாழேனே (2)
1. நம்பின மனிதர்கள் என்னை சூழும்போது
நீர் மட்டும் கைவிடாமல் என்னோடிருந்தீர்
நம்பின மனிதர்கள் கைவிடும்போது
நீர் மட்டும் கைவிடாமல் என்னோடிருந்தீர்
உம்மோடு நான் தங்கும் ஒரு நாளுமே
ஆயிரம் நாட்களும் வீணானதே
உம்மோடு நான் பேசும் ஒரு வார்த்தையே
ஆயிரம் வார்த்தையும் வீணானதே – உம்மோடு நானும்
2. பணம் உள்ளப்போது என்னை நம்பின மனிதர்கள்
பணம் இல்லாப்போது என்னை தூற்றினார்களே
எல்லாம் உள்ளப்போது என்னை நேசித்த மனிதர்கள்
ஒன்றும் இல்லாப்போது என்னை தூஷித்தார்களே
நான் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் நீர் மட்டும்தான்
என்னை வெறுக்காமல் கூடவே சேர்த்தீரையா
நான் வாழ்ந்தாலும் உன் நாமம் வாழ்த்திடுவேன்
நான் மரித்தாலும் உம் சந்நிதியில் சேர்ந்திடுவேன் – உம்மோடு நானும்
மனதுருகும் தேவனே என்னை பாடல் வரிகள், Manathurugum Devanae Ennai Song Lyrics
Manathurugum Devanae Ennai Lyrics in English
Manathurugum Devanae Ennai Theattrum Rajanae
Neerae Enathu Vazhiyaiya
Manathurugum Devanae Ennai Theatrum Rajanae
Neerae Enathu Oliyaiya
Ummodu naanum Uravaaduvean
Neerintri Naanum Uyir Vaaleanae -2
1.Nambina Manithargal Ennai Soozhumpothu
Neer Mattum Kaividamal Ennodiruntheer
Nambina Manithargal Kaividumpothu
Neer Mattum kaividamal Ennodiruntheer
Ummodu Naan Thangum Oru Naalumae
Aayiram Naatkalum Veenanthae
Ummodu Naan Pesum Oru vaarthaiyae
Aayiram Vaarthaiyum Veenanathae – Ummodu Naan
2.Panam Ullapothu Ennai Nambina Manithargal
Panam Illapothu Ennai Thoottrinaargalae
Ellaam Ullapothu Ennai nesitha Manithargal
Ontrum Illapothu Ennai Thoosithaargalae
Naan Uyarnthalaum Thaalnthaalum Neer Mattum Than
Ennai verukkaamal koodavae Seartheeraiya
Naan Vaalnthalaum Un Naamam Vaalthiduvean
Naan Marithaalum Um Sannithiyil Searnthiduvean – Ummodu naanum
Key Takeaways
- The article features the lyrics of the song ‘மனதுருகும் தேவனே என்னை – Manathurugum Devanae Ennai’.
- The song emphasizes themes of divine companionship and trust in God during adversity.
- It contains verses reflecting on relationships with people based on faith and material wealth.
- The English translation of the lyrics is also provided for better understanding.
Estimated reading time: 2 minutes

