Paarungal Thodarnthu Vaarungal – பாருங்கள் தொடரந்து வாருங்கள்

Faith Score+1
Faith Score+1

Paarungal Thodarnthu Vaarungal Tamil christian keerthanaigal good friday song lyrics – பாருங்கள் தொடரந்து வாருங்கள்

பல்லவி

பாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா
பாதையிற், கோதையரே.

அனுபல்லவி

ஆருங் காணவே ஆட்டுவாசல் கடந்து மலை
மேட்டில் நடந்தனந்தங் கோட்டிகள் படுகின்றார் – பாருங்கள்

சரணங்கள்

1. பொன்னாய் ஒளிரு மேனி மண்ணாய் மடியுதே,
புங்க உடலெல்லாம் புழுதிகள் படியுதே,
நன்னய மலர்க் கண்கள் கண்ணீர்கள் வடிக்குதே,
நாவும் அஸ்தியும் காய்ந்து சாவுமே பிடிக்குதே. – பாருங்கள்

2. பாவியைத் தேடி வந்த பாதங்கள் பொரியுதே,
பட்சத்தினால் விரித்த கைகளும் நெரியுதே,
நாபிக்கமலம் பற்றிக் கோபித்துக் கரியுதே,
நடையு முடையுந் தொய்ந்து சதைகளும் சரியுதே. – பாருங்கள்

3. திருமுக அருள் ஒன்றும் தெரியாதடைந்ததே,
செங்குரு திகளெல்லாம் பொங்கி வடிந்ததே,
சருவ வல்லபம் குன்றித்திறையும் நிறைந்ததே,
ஜகமும் பரமுந் துக்க சாகரத்தழுந்துதே. – பாருங்கள்

4. துன்ப துரிதத்திலும் அன்பையே பொழிகின்றார்,
துட்டர்கள் அதற்காகத் திட்டுகள் மொழிகின்றார்,
அன்பாய்ப் பிழைக்கத் தமதாவியைக் கெடுக்கின்றார்,
அந்தோ நசரேத்தையர் நொந்தடி எடுக்கின்றார் – பாருங்கள்

Paarungal Thodarnthu Vaarungal song lyrics,  பாருங்கள் தொடரந்து வாருங்கள் song lyrics

Paarungal Thodarnthu Vaarungal song lyrics in English

Paarungal Thodarnthu Vaarungal Golgatha
Paathaiyir Kothaiyarae

Aarum Kaanavae Aattuvaasal Kadanthu Malai
Meattil Nadanthanam Kottigal Padukintraar – Paarungal

1.Ponnaai Olitu Meani Mannaai Madiyuthae
Punga Udalellaam Puluthigal Padiyuthae
Nanya Malar Kangal Kanneerkal Vadikkuthae
Naavum Asthiyum Kaainthu Saavumae Pidikkuthae – Paarungal

2.Paaviyai Theadi Vantha Paathangal Poriyuthae
Patchathinaal Viriththa Kaikalum Neariyuthae
Naabikkamalam Pattri Kobiththu Kariyuthae
Nadaiyumudaium Thointhu Sathaikalum Sariyuthae – Paarungal

3.Thirumuga Arul Ontrum Theriyathadainththae
Senguru Thikalellaam Pongi Vadinthathae
Saruva Vallabam Kuntrithiraiyum Nirainthathae
Jagamum Paramum Thukka Saakarathalunthathae – Paarungal

4.Thunba Thurithathilum Anbaiyae Polinkintraar
Thuttargal Atharkkaaga Thittugal Molikintraar
Anbaai Pilaikka Thamathaviyai Keadukintraar
Antho Nasareathaiyar Nonthadi Edukkintraar – Paarungal

Key Takeaways

  • The article features the lyrics for the Tamil Christian song ‘Paarungal Thodarnthu Vaarungal – பாருங்கள் தொடரந்து வாருங்கள்’.
  • It includes multiple sections: a pallavi, anupallavi, and several stanzas (sarangal).
  • The lyrics emphasize themes of love, suffering, and redemption and reference Golgatha.
  • The article provides an English translation of the lyrics for broader understanding.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo