பரத்திலே நன்மை வருகுமே – Parathilae Nanmai Varugumae

Faith Score+1
Faith Score+1

பரத்திலே நன்மை வருகுமே – Parathilae Nanmai Varugumae

பல்லவி

பரத்திலே நன்மை வருகுமே, நமக்கு நித்திய
பாக்கியம் மிகப் பெருகுமே.

அனுபல்லவி

பரத்திலே சிறந்த ஜீவ கதி வளர் கிரீடம் அதைச்
சிரத்திலே அணிய, யேசு தேவனைப் பணிந்து போற்றுவோம். – பரத்திலே

சரணங்கள்

1.பரம சீயோன் மலையில் ஏறலாம்;-கிறிஸ்தின் புதுப்
பாட்டைப் பாடி, ஜெயத்தைக் கூறலாம்;
சுரமண்டலத் தொனியைச் சேரலாம்;-தேவகுமாரனின்
சுந்தரம் கண்டிளைப்பும் ஆறலாம்;
வரமிகும் பரிசுத்தரோடும் வானவர்களான சேனைத்
திரள் சபைச் சங்கத்தினோடும் நாம்
சேர்ந்தெந்நாளும் வாழ்ந்திருக்கலாம்.

2.ஆட்டுக் குட்டியின் ரத்தத்தில் தோய்த்து,-வஸ்திரங்கள் தமை அழுக்கறப் பிரகாசமாய் வெளுத்து,
வாட்டங்கள் அனைத்தையும் தீர்த்து, – கண்ணீர் அறவே மகிமையின் கரத்தினால் துடைத்து,
கூட்டி ஜீவப் புனலிடத்தில் கொண்டு மேய்த்தருள் முடியைச்
சூட்டியே அனந்த பாக்கியச்
சுகத்தில் வாழ்ந்திருக்கச் செய்குவார்.

Parathilae Nanmai Varugumae song lyrics in english

Parathilae Nanmai Varugumae Namakku Niththiya
Baakkiyam Miga Perugumae

Parathilae Sirantha Jeeva Kathi Valar Kireedam Athai
Sirathilae Aniya Yesu Devanai Paninthu Pottruvom

1.Parama Seeyon malaiyil Yearalaam Kiristhin Puthu
Paattai Paadi Jeyaththai Kooralaam
Suramandala Thoniyai Searalaam Deva Kumaaranin
Suntharam Kandilaippum Aaralaam
Varamigum Parisuththarodum Vaanavarkalaana Seanai
Thiral Sabai Sangathinarodum Naam
Searnthennaalum Vaalnthirukkalaam

2.Aattukuttiyin Raththathil Thointhu Vasthirangal Thamai
Alukkara Pirakaasamaai Veluthu
Vaattangal Anaithaiyum Theerthu Kanneer Aravae
Magimaiyin Karathinaal Thudaithu
Kootti Jeeva Punalidaththil Kondu Meitharul Mudiyai
Soottiyae Anantha Bakkiya
Sugaththil Vaalnthirukka Seiguvaar

பரத்திலே நன்மை வருகுமே – Parathilae Nanmai Varugumae

பல்லவி

பரத்திலே நன்மை வருகுமே,-நமக்கு நித்திய
பாக்கியம் மிகப் பெருகுமே.

அனுபல்லவி

பரத்திலே சிறந்த ஜீவ பதி வளர் கிரீடம் அதைச்
சிரத்திலே அணிய, யேசு
தேவனைப் பணிந்து போற்றுவோம். – பரத்

சரணங்கள்

1. வருத்தம், பசி, தாகம், சாவில்லை;-அலறுதலும்
மனத்துயர், இரவு சாபம் இல்லை;
அருணன், மதி வேண்டியதில்லை;-துன்மார்க்கர் எனும்
அசுத்தர் வந்து சேர்வதும் இல்லை;
சருவ மகிமை யுடைய தந்தை
பரனொடு கிறிஸ்தின் திரு
அருள் மிகச் சிறந்த ஒளி
தெளிவுற ப்ரகாசம் ஆக்குமே – பரத்

2. ஆட்டுக் குட்டியின் ரத்தத்தில் தோய்த்து,-வஸ்திரங்கள் தமை
அழுக்கறப் பிரகாசமாய் வெளுத்து,
வாட்டங்கள் அனைத்தையும் தீர்த்து,-கண்ணீர் அறவே
மகிமையின் கரத்தினால் துடைத்து,
கூட்டி ஜீவ புனலிடத்தில்
கொண்டு மேய்த் தருள் முடியைச்
சூட்டியே அனந்த பாக்கிய
சுகத்தில் வாழ்ந்திருக்கச் செய்குவார். – பரத்

3. பங்கம் இன்றி மகிழ்ந்து வாழலாம்;-பேர் ஒளி துலங்கும்
பரம கிருபாசனத்தைச் சூழலாம்;
சங்கை யோ டரசிருந்தே ஆளலாம்;-பராபரன் தன்
சமூக ப்ரபைதனிலே வாழலாம்;
மங்கை சீயோன் மகளின் பிரிய
மன்னவன் தேவாட்டுக் குட்டியின்
இங்கிதக் கல்யாணப் பந்தியின்
இருந்து நித்ய விருந்தால் மகிழலாம். – பரத்

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo