
Saranam Saruvesa Thayai Koorum – சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா
பல்லவி
சரணம் சருவேசா! தயை கூரும் அதிநேசா!
அனுபல்லவி
கருணை புரிந்தாள் இப்புது வருடமே முழுவதும்
கடையற
1. இன்றளவில் காத்தாய் வெகு இரக்கமுறப் பார்த்தாய்
நன்மை மிகவே தந்தாய் நவ வருடமிது ஈந்தாய் – சர
2. எத்தனை துன்பங்கள் வந்ததனைத்தையும் அணுகா,
சித்தம் வைத்துக் காத்த தேவா திருவடி சரணம் – சர
3. இந்த ஆண்டில் இடர்க்கு எம்மை என்றும் தப்புவிப்பாய்
உந்தனாளுகை நீங்கா தெந்தனை யாண்டிடும் அன்பாய் – சர
4. பாவஞ் சிதைந் தொழிய எங்கும் சாப மகன்றழிய
தேவ கோபம் தீர்த்திட துன்னிய கொள்ளை நோய் நைந்திட – சர
5. தீய சாத்தான் சோதனையில் சிக்கி சீர்கெடாமல்
தூய ஆவியால் புதிய ஜீவியஞ் செய்யவே துணைபுரி – சர
6. இந்த வருடம் செழிக்க எவரும் உனில் களிக்க
தந்தோம் அடியோர் துதிமிக தயவுடனாசீர்வதித்திடும் – சர
Saranam Saruvesa Thayai Koorum
Karunai Purinthazh Epputhu varudame
muzhuvathum Kadaiyara
Entrazhavil Kaathaai Vegu Erakkamura Paarthaai
Nanmai Migave thanthaai nava varudamithu Eenthaai
Eththanai Thunbangal Vanthanaithaiyum Anugaa
Siththam Vaithu kaaththa Deva Thiruvadi Saranam
Intha Aandil Edarkku Emmai Entrum Thappuvippai
Unthanaalugai Neenga Eththanai Yaandidum Anbaai
Paavam sithain Thozhiya Engum Saaba Magantrazhiya
Deva kobam theerthida Thunniya Kozhllai Nooi Nainthida
Theeya Saathan sothanaoyil Sikki Seerkedamal
Thooya Aaviyaal Puthiya Jeeviyanj Seiyavae Thunaipuri
Intha varudam Sezhikka Evarum unil kazhikka
Thanthom Adiyor Thuthimiga Thayauvdan Aasirvathidum