தனிமையின் நேரங்களில் – Thanimaiyin Nerangalil Tamil Christian Song Lyrics
பல்லவி
தனிமையின் நேரங்களில் துணையானீரே
இருளின் இடுக்கங்களில் வெளிச்சமானீரே
வெயிலின் தகிப்புகளில் நிழலானீரே
கடலின் ஓலங்களில் துடுப்பானீரே – 2
அனுபல்லவிபடகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பா
புயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2
தனிமையின் நேரங்களில் துணையானீரே…
சரணம்கெர்ச்சிக்கும் சிங்கம் போல சாத்தான் வந்தாலும்
பொல்லாத மனுஷர்கள் எதிர்த்து நின்றாலும் – 2
என் பக்கமாய் இருந்தீரையா
யுத்தங்களை ஓயப்பண்ணினீர் – 2
படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பா
புயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2
தனிமையின் நேரங்களில் துணையானீரே…
ஏராள நன்மைகள் எனக்கு செய்தீரே
கசப்பான என் வாழ்வை மதுரமாக்கினீர் – 2
தடைகளெல்லாம் நீக்கினீரையா
கோணல்களை செவ்வை பண்ணினீர் – 2
படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பா
புயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2
தனிமையின் நேரங்களில் துணையானீரே…
வெண்கலக் கதவுகளை எனக்காய் உடைத்தீர்
இருப்புத் தாழ்ப்பாள்களை எனக்காய் முறித்தீர் – 2
பெயர் சொல்லி அழைத்தீரைய்யா
முடிவுவரை என்னோடிருப்பீர் – 2
படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பா
புயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2
தனிமையின் நேரங்களில் துணையானீரே…
பாசத்தின் பிணைப்பால் என்னை தேடி வந்தீரே
நேசத்தின் கரம் கொண்டு அணைத்து கொண்டீரே – 2
உம்மை விட்டு எங்கே ஓடுவேன்?
நீரில்லாமல் நானே இல்லையே – 2
படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பா
புயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2
தனிமையின் நேரங்களில் துணையானீரே
இருளின் இடுக்கங்களில் வெளிச்சமானீரே
வெயிலின் தகிப்புகளில் நிழலானீரே
கடலின் ஓலங்களில் துடுப்பானீரே – 2
படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பா
புயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2
தனிமையின் நேரங்களில் துணையானீரே
Thanimaiyin Nerangalil Lyrics in English
தனிமையின் நேரங்களில் பாடல் வரிகள், Thanimaiyin Nerangalil Song Lyrics
- Thiyangum Ullam Kandaar Lyrics – தியங்கும் உள்ளம் கண்டார்
- Kalangathae Manamae Un Yesu Lyrics – கலங்காதே மனமே உன் இயேசு
- En Kanneerai Kaanum Devan Lyrics – என் கண்ணீரை காணும் தேவன்
- Nenje Neeyen Sogam Lyrics – நெஞ்சே நீயேன் சோகம்
- Thunbamana Velaiyil Lyrics – துன்பமான வேளையில்
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘தனிமையின் நேரங்களில் – Thanimaiyin Nerangalil’.
- The song conveys themes of comfort and companionship during moments of loneliness.
- It describes the protective and guiding nature of Jesus amidst life’s struggles.
- The lyrics express gratitude for the blessings and transformation in life through faith.
- Additional links to related Tamil Christian songs are provided at the end.
Estimated reading time: 2 minutes