Thothiram Pugal Keerthanam Tamil Christian Keerthanaigal song lyrics – தோத்திரம் புகழ் கீர்த்தனம்
பல்லவி
தோத்திரம், புகழ் கீர்த்தனம், ஜெய சோபனம் உமக்கையா!-துதி
சொல்லவும் தீதை வெல்லவும் க்ருபை சூட்டுவீர், கிறிஸ்தையா!
அனுபல்லவி
கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா, தேவபாலா,
மனுவேலா, மறைநூலா, செங்கோலனு கூலா.- தோத்
சரணங்கள்
1. எந்தனை மீட்க நீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர்; நன் மனுவாய்- மறை
ஏற்றித் தினம் எனை ஆற்றி நன் மொழியால் தேற்றினீர்; முற்றிலும் தனுவாய்
நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர்; எத்தனை பரிவாய்- தேவ
நீதியும் விளங்கச் செய்து பவமனு சாதிக்கிரங்கி நற்குருவாய்
நின்றீரே, நடுவராய் நின்றீரே; தீதை எல்லாம்
கொன்றீரே, பசாசையும் வென்றீரே, ஜெயம் கொண்டீரே நித்ய. – தோத்தி
2. சுத்த சுவிசேஷ சத்தியமொழியை வித்தரிக்க வரந்தாரும்;-நேய
சூரிய கிரண வீரியத்தால் எனக் காரோக்கியம் அருள்கூரும்;
நித்தம் எனைத் தேவ பத்தியில் நடத்திச் சித்தம் இரங்கிக் கண்பாரும்;- கரம்
நீட்டிக் கிருபையைச் சூட்டிக் கவலையை ஓட்டி என் துயரைத் தீரும்;
நில்லும், ஐயா, என் பக்கத்தில் நில்லும், ஐயா; தினம் நலம்
சொல்லும், ஐயா; தீயோன் தனை வெல்லும், ஐயா; தீதைக் கொல்லும், ஐயா, துய்யா! – தோத்தி
3. நித்திய ஜீவனைப் பெற்றும்மோடிருக்கச் சுத்தி கரித்தென்னை ஆளும்;-பவ
நிந்தையோ டென் சுய கந்தை அகற்றி மெய் விந்தைக் கிருபையால் சூழும்;
சத்திய வசனவித்தால் எனை ஜெனிப்பித் தென் மனதினில் வாழும்; – பதஞ்
சாற்றித் தினம் உமைப் போற்றிப் பணிந்திடத் தேற்றி எனை அரசாளும்;
சற்குருவே, கிறிஸ்தெனும் சற்குருவே, ஜீவன் உள
சொற்குருவே, நித்தியானந்த நற்குருவே, பரப் பொற்குருவே, தேவே. – தோத்தி
Thothiram Pugal Keerthanam lyrics, தோத்திரம் புகழ் கீர்த்தனம் பாடல் வரிகள்
Thothiram Pugal Keerthanam Song Lyrics in English
Thothiram Pugal Keerthanam
Jeya Sobanam Umakkaiya Thuthi
Sollavum Theethai Vellavum Kirubai Soottuveer Kiristhaiya
Kothiravazhi Sirantha Yutha Nal Kottrava Deva Paala
Manuveala Marainoola Senkoalnu Koola
1.Enthanai Meetka Neer Intha Ulaginil Vanthu Pirantheer Nan Manuvaai – Marai
Yeattri Dhinam Enai Aattri Nan Mozhiyaal Theattrineer Muttrilum Thanuvaai
Ninthai Adainthu Mei Sontha Uthirathai Sinthineer Eththanai Parivaai – Deva
Neethiyum Vilanga Seithu Pavamanu Saathikirangi Narkuruvaai
Nintreerae Naduvaraai Nintreerae Theethai Ellaam
Kontreere Pasasaiyum Ventreerae Jeyam Kondeerae Nithya
2.Suththa Suvishesha Sathiya Mozhiyai Viththarikka Varanthaarum Neaya
Sooriya Kiran Veeriyathaal Enak Aarokkiyam Arul Koorum
Niththam Enai Deva Bakthiyil Nadathi Sitham Irangi Kanpaarum Karam
Neetti Kirubaiyai Sootti Kavalaiyai Ootti En Thuyarai Theerum
Nillum Aiya En Pakkathil Nillum Aiyya Dhinam Nalam
Sollum Aiyaa Theeyon Thanai Vellum Aiya Theethai Kollum Aiya Thuiya
3.Nithiya Jeevanai Pettrum Ummodirukka Suththi Karithennai Aalum Pava
Ninthaiyodu En Suya Kanthai Agattri Mei Vinthai Kirubaiyaal Soolum
Sathiya Vasanaviththaal Enai Jenippithen Manathinil Vaalum Patham
Sattri Dhinam Umai Pottri Paninthida Theattri Enai Arasaalum
Sarkuruvae Kirsithennum Sarguruvae Jeevan Ula
SorGuruvae Nithiyanantha Narguruvae Para Porguruvae Devae
Key Takeaways
- The article features the song lyrics for Thothiram Pugal Keerthanam – தோத்திரம் புகழ் கீர்த்தனம்.
- It includes the song’s verses, including the Pallavi and Anupallavi sections.
- The lyrics express themes of devotion and God’s grace, highlighting the importance of faith.
- Additional links to related Tamil Christian songs are also provided for further exploration.
Estimated reading time: 2 minutes

