வைகறையில் உமக்காக – Vaigaraiyil Umakkaaga Jebathotta Jayageethangal vol-24 song lyrics, written and sung by Father Berchmans
வைகறையில் ( காலைநேரம் ) உமக்காக
வழி மேல் விழி வைத்து
காத்திருக்கின்றேன் இறைவா
என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும்
1.உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்
குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில்
2.ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே
நீர்தானே எனது உரிமைச் சொத்து
எனக்குரிய பங்கும் நீர்தானய்யா
3.படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
அழிந்து போக அனுமதியும் தரமாட்டீர்
என் இதயம் பூரித்து துள்ளுகின்றது
என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது
4.காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால்
நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
எப்போதும் என் முன்னே நீர்தானய்யா
ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்
வைகறையில் உமக்காக பாடல் வரிகள், Vaigaraiyil Umakkaaga Song Lyrics
Vaigaraiyil Umakkaaga Lyrics in English
Vaigaraiyil Kalai neram Umakkaaga
Vazhi Mel Vizhi Vaithu
Kaathirukintrean Iraiva
En Jebam Keattu Pathil Thaarum
Peru Moochai Paarthu Manam Irangum
1.Um Illam Vanthean Um Kirubaiyinaal
Bayabakthiyodu Paninthu Kondean
Niraivana Magilchi um Samugathil
Kuraiyillatha Perinbam Um Paathathil
2.Aatchi Seiyum Aalunar Neerthanaiya
Ummaiyantri veru Oru Selvam Illaiyae
Neerthanae Enathu urimai Sothu
Enakuriya Pangum Neerthanaiya
3.Padu Kuzhiyil Paathalathil Vidamatteer
Alinthu poga Anumathiyum Tharamatteer
En Idhayam Poorithu Thallukintrathu
En Udalum Paathukappil Ilaipaaruthu
4.Kaalaithorum Thirupthiyakkum Um kirubaiyaal
Naalelaam Kazhikoornthu Magilnthiruppean
Eppothum En Munnae Neerthanaiya
Orupothum Asaiura Vidamaatteer
Key Takeaways
- The song ‘வைகறையில் உமக்காக – Vaigaraiyil Umakkaaga’ features lyrics written and sung by Father Berchmans.
- It expresses deep devotion, highlighting themes of prayer, gratitude, and divine guidance.
- The lyrics discuss seeking God’s presence and feeling joy and security through faith.
- The song emphasizes that God’s grace brings happiness and fulfillment in life.
Estimated reading time: 2 minutes



