Intru Piranthanaal vaalthukkal song lyrics – இன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார்
கீதங்கள் இசைக்கட்டும் நாதங்கள் முழங்கட்டும் நேசங்கள் மலரட்டும்
இன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இன்று மலர்ந்த நாள் மண்ணிலே
அன்பின் குழந்தை இயேசுவே
உந்தன் மழலை மொழி கேட்கவே
எந்தன் மனமும் தினம் ஏங்குதே
இன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- ஒரு விண்தெய்வம் நம்மோடு மண்மீதிலே
மழலையாய் மலர்ந்ததே
அந்த விண்வார்த்தை நம் வாழ்வில் இந்நாளிலே
விடியலாய்ப் புலர்ந்ததே
இனி வேற்றுமை மறையட்டும் எங்கும் வேதனை தீரட்டும்
வையம் மகிழும் வான்படை போற்றும்
வான தேவன் வரவில் – நல்ல
இதயம் நிறையும் உதயம் மலரும்
தேவமைந்தன் உறவில் – இன்று - ஒரு விண்தெய்வம் இந்நாளில் நம் இல்லத்தில்
புதையலாய்த் தவழ்ந்ததே
அந்த விடிவெள்ளி நம் வாழ்வில் ஒளியேற்றவே
புதுமையாய் ஒளிர்ந்ததே
இனி ஒற்றுமை பெருகட்டும் போர் கலகங்கள் ஓயட்டும்
வையம் மகிழும் வான்படை போற்றும்
வான தேவன் வரவில் – நல்ல
இதயம் நிறையும் உதயம் மலரும்
தேவமைந்தன் உறவில் – இன்று
- Aadhi Thiru Vaarthai Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar Lyrics – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal Lyrics – ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
- Aanantha Santhosham Lyrics – ஆனந்த சந்தோஷம்
- Aanantham Pongidum Nannalithu Lyrics – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
