நெஞ்சமே கெத்சமேனக்கு – Nenjame gethsamenakku Nee Nadanthu Tamil Christian Good Friday old classic keerthanaigal song lyrics
பல்லவி – கண்ணிகள்
1. நெஞ்சமே, கெத்சமேனக்கு
நீ நடந்து வந்திடாயோ?
சஞ்சலத்தால் நெஞ்சுருகி
தயங்குகின்றார் ஆண்டவனார்
2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சி
அங்கலாய்த்து வாடுகின்றார்
தேற்றுவார் இங்காருமின்றி
தியங்குகின்றார் ஆண்டவனார்.
3. தேவ கோபத் தீச்சூளையில்
சிந்தை நொந்து வெந்துருகி
ஆவலாய்த் தரையில் வீழ்ந்து
அழுது ஜெபம் செய்கின்றாரே.
4. அப்பா பிதாவே இப்பாத்ரம்
அகலச் செய்யும் சித்தமானால்
எப்படியும் நின் சித்தம்போல்
எனக்காகட்டும் என்கின்றாரே
5. இரத்த வேர்வையாலே தேகம்
மெத்த நனைந்திருக்குதே
குற்றமொன்றும் செய்திடாத
கொற்றவர்க் கிவ்வாதையேனோ?
6. இந்த ஆத்ம வாதையெல்லாம்
எந்தன் பாவத்தால் வந்ததே
சுந்தரம் சேர் யேசுவே என்
தோஷம் பொருத்தாளுமையா
7.வானத்திலிருந்தோர் தூதன்
வந்தவரைப் பலப்படுத்தத்
தான் சஞ்சலத்தோடு
முழந்தாள் நின்று வேண்டுகின்றார்.
நெஞ்சமே கெத்சமேனக்கு song lyrics, Nenjame gethsamenakku song lyrics, Tamil songs
Nenjame gethsamenakku song lyrics in English
1.Nenjamae Gethsemanaekku Nee Nadanthu Vanthidaayo
Sanjalaththaal Nenjurugi Thayangukintraar Aandavanaar – Nenjamae gethsamenakku
2.Aaththumaththil Vaathai Minji Angalaaiththu Vaadukintraar
Theattruvaar Engaarumuntri Thiyangukintraar Aandavanaar
3.Deva Koba Theesoolaiyil Sinthai Nonthu Venthurugi
Aavalaai Tharaiyil Veelnthu Aluthu Jebam Seikintraarae
4.Thaangonna Niththirai Kondu Than Seesharkal Urangi Vila
Aangavar Thaniththirunthu Angalaaiththu Vaadukintaar
5.Appa Pithavae Eppathram Agala Seiyum Siththamaanaal
Eppadiyum Nin Siththam Poal Enakkaattum Enkintraarae
6.Raththa Vearvaiyaal Theagam Meththa Nanaithirukkuthae
Kuttram Ontrum Seithida Kottravarku Evvaathai Yeano
7.Vaanathilirunthor Thoothan Vanthavarai Balapadutha
Thaan Sanjalathodu Mulanthaal Nintru Vendukintraar


