இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம் – Yesuvin Namathai Potriduvom Tamil Christian Song Lyrics
இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்
என்றும் அவர் துதி சாற்றிடுவோம்
இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்
என்றும் அவர் துதி சாற்றிடுவோம்
கரடுமுரடான பாதையினில்
கால் தடுமாறி தியங்குகையில்
கரடுமுரடான பாதையினில்
கால் தடுமாறி தியங்குகையில்
கருணையாய் பேசி கரமதை நீட்டி
காத்திடும் தயவதைப் பாடிடுவோம்
இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்
என்றும் அவர் துதி சாற்றிடுவோம்
பாவத்தின் பாரத்தை நீக்கினாரே
சாபத்தின் கோரத்தைப் போக்கினாரே
பாவத்தின் பாரத்தை நீக்கினாரே
சாபத்தின் கோரத்தைப் போக்கினாரே
சாகாது வாழ சாவதை வென்ற
தேவக்குமாரனைப் பாடிடுவோம்
இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்
என்றும் அவர் துதி சாற்றிடுவோம்
யோர்தானைக் கடந்திடும் நேரமதில்
அணைத்திடுவார் அவர் மார்பதினில்
யோர்தானைக் கடந்திடும் நேரமதில்
அணைத்திடுவார் அவர் மார்பதினில்
அக்கரை சேர்த்து அகமகிழ்விக்கும்
அன்பரின் நாமத்தைப் பாடிடுவோம்
இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்
என்றும் அவர் துதி சாற்றிடுவோம்
இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்
என்றும் அவர் துதி சாற்றிடுவோம்
Yesuvin Namathai Potriduvom Lyrics in English
இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம் பாடல் வரிகள், Yesuvin Namathai Potriduvom Song Lyrics
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்.’
- The song emphasizes praising and glorifying Jesus’ name continuously.
- It portrays themes of divine mercy and victory over sin and death.
- The lyrics invite reflection on Jesus’ love and His protective embrace.
- The article concludes with a note on the source, World Tamil Christians.
Estimated reading time: 2 minutes
